/* */

பொதுமக்களுக்கு இ-சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் பெருமிதம்

பொதுமக்களுக்கு இ-சேவைகள் வழங்குவதில், தமிழகம் முன்னிலையில் உள்ளது என மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு இ-சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் பெருமிதம்
X

நாமக்கல் மாவட்டத்தில், மின்-அலுவலகம் நடைமுறைப்படுத்துதல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்தில், மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் மின்- அலுவலகம் (இ-ஆபீஸ்) நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகித்தார். ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதமில்லா மின்- அலுவலகம் (இ-ஆபீஸ்) நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், வாய்ப்புகள் ஆகியவற்றில் துறை அலுவலர்களின் கருத்துக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார். மாவட்டத்தில் மின்- அலுவலகம் நடைமுறைப்படுத்துவதற்குண்டான முக்கியத்துவம் குறித்து அவர் அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:

தமிழகத்தில், சாமானிய மக்களுக்கும் அரசின் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மின்-அலுவலக திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் மக்களை தேடி அரசு சேவைகள் உடனுக்குடன் கிடைக்கும். அரசு திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்ற தரவுகளை உடனுக்குடன் பெற்றிட முடியும். மேலும், இ-சேவை மையங்கள் மூலம் 200 ஆக இருந்து வந்த அரசின் சேவைகள் தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனிவருங் காலங்களில் படிப்படியாக அரசின் அனைத்து துறை சேவைகளும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் முழுவதும் மின்- அலுவலகங்களாக மாற்றப்படும். இதன்மூலம் அரசு அலுவலகங்களில் காகிதங்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு, அரசு பணியாளர்களுக்கு அவர்கள் பணிகளை விரைந்து செய்ய முடியும். நாமக்கல் போன்ற வளரும் மாவட்டங்களில், படித்த இளைஞர்களுக்கு திறன்களை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். தலைமைச் செயலகத்தில் 3,645 பேருக்கு மின் அலுவலக பயிற்சி வழங்கி முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசின் சேவைகளை இன்னும் மேம்படுத்தி வழங்க முடியும்.

கொல்லிமலையில் எளிதான இண்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவைக்காக ரூ. 4 கோடி மதிப்பீட்டில் செல்போன் டவர் அமைக்க, ஆதிதிராவிட நலத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு அனுப்பியுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் வெகு விரைவில் 12,525 கிராமங்கள் பைபர் நெட் மூலம் இணையதள சேவையை பெற முடியும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் விரைவில் முடிவடையும்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இத்துறை 16-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் 17-வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. ஐடி ஹப் என்ற திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தி, படித்த இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்தி எதிர்காலத்தில் அவர்கள் உலக தரத்திலான வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திறன்களை தகவல் தொழில்நுட்ப துறை வழங்க உள்ளது. இதன்மூலம் தொழில்துறைக்கு தேவையான திறன்மிக்க பணியாளர்கள் எதிர்காலத்தில் கிடைப்பார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, சப்கலெக்டர்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்