/* */

மல்லசமுத்திரம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

முஞ்சனூரில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

HIGHLIGHTS

மல்லசமுத்திரம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
X

மல்லசமுத்திரம் அருகே நடைபெற்ற தமிழக அரசின், சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், முஞ்சனூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

முஞ்சனூரில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்குவதன் துவக்க விழா நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித் திட்டம், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, முதியோர் உதவித் தொகை வழங்கிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

Updated On: 6 Jun 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?