/* */

2024ல் தமிழக சட்டசபைக்கும் தேர்தல்: பாஜ துணைத்தலைவர் தகவல்

வருகிற 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும்போது, தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.

HIGHLIGHTS

2024ல் தமிழக சட்டசபைக்கும் தேர்தல்: பாஜ துணைத்தலைவர் தகவல்
X

நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசினார். அருகில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வடிவேல், செயலாளர் மகேஸ்வரன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சியாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜ மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்திட, ஐகோர்ட் அனுமதி அளித்தும், திமுக அரசு தடை விதித்தது சட்டத்தை மீறிய செயலாகும். இதைத்தொடர்ந்து வருகிற நவ.6ம் தேதி ஊர்வலம் நடத்தலாம் என்றும், அதற்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்ரவிட்டுள்ளது. திமுக கட்சியின் ஒரு அணியாக செயல்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சியினர் தமிழகத்தில் மத நல்லினக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். அவர்கள் கூட்டணி கட்சியினரே இப்படி கூறுவதற்கு காரனம், திமுகவின் தூண்டுதல்தான். தமிழகத்தில் மத நல்லினக்கம் நல்ல முறையில்தான் உள்ளது. அதனால்தான் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பாஜவில் உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதாக கூறி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் பரவுவது வாடிக்கை.

நான் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, கட்சித் தலைமையின் போக்கு பிடிக்கால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன். தற்போது மற்றொரு துணை பொது செயலாளர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி கட்சியில் இருந்து விலகி உள்ளார். இச்சம்பவம், திமுகவின் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருவதைக் காட்டுகிறது. 9ம் தேதி திமுக தலைவர் தேர்தல் நடந்தவுடன் மேலும் பலர் அக்கட்சியில் இருந்து வெளியில் வரத்தயாராக உள்ளனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவர் 5 ஆயிரம் கோடி பணத்தை அங்கு முதலீடும் செய்ய சென்றுள்ளதாக மன்னார்குடி திமுக எம்எல்ஏ ராஜா கூறியுள்ளார். அவர் மீது பாஜக சார்பில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும். ஓட்டு வங்கிக்காக ஆன்மீக அரசியல் பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலில் விநாயகர் சதுர்த்திக்கும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கும், தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கும் தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறட்டும். இந்து மதத்தைப் பறிற அவதூறாக பேசிய அவரது கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கட்டும்.

பாரத பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில், உலக நாடுகள் வியக்கும் வன்னம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளார். இதை சர்வதேச நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் வருகிற 2024ம் ஆண்டு பார்லி தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெறும்போது தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றால் நான் பொறுப்பல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியுள்ளார். இருப்பினும், இந்த பார்லி தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. தேர்தல் முடிந்தவுடன் 3வது முறையாக பாரத பிரதமராக மோடியும், தமிழக முதல்வராக முதன்முறையாக பாஜக தலைவர் அண்ணாமலையும் பதவியேற்பது உறுதியாகிவிட்டது என்று அவர் கூறினார்.

Updated On: 8 Oct 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி