/* */

கொரோனாகாலத்தில் கோவைக்கு 6 லட்சம் டன் அரிசி, 37,000 டன் கோதுமை விநியோகம்

கொரோனாகாலத்தில் கோவைக்கு 6 லட்சம் டன் அரிசி, 37,000 டன் கோதுமை மத்திய அரசு விநியோகித்துள்ளதாக எப்சிஐ தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனாகாலத்தில் கோவைக்கு 6 லட்சம் டன் அரிசி, 37,000 டன் கோதுமை விநியோகம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற ஐகானிக் வார விழாவில், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவர் ராமலிங்கம் பேசினார். அருகில் எப்சிஐ மண்டல மேலாளர் ராஜேஷ், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி, சத்தியமூர்த்தி, ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியன் ஆகியோர்.

மத்திய அரசின் மூலம், கொரோனா காலத்தில் கோவை மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு 6 லட்சம் டன் அரிசி மற்றும் 37 ஆயிரம் டன் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக, எப்சிஐ மண்டல மேலாளர் தெரிவித்தார்.

கோவை மண்டல இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) மத்திய அரசின் ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் வார விழா , நாமக்கல் ஜெயா வேர் ஹவுசிங் கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி, நாமக்கல் மாவ ட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவர், முன்னாள் எம்.பி ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்துப் பேசினார். கோவை மண்டல இந்திய உணவுக்கழக மேலாளர் ராஜேஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையிலன் பேரில், மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தடையின்றிவிநியோகம் செய்து வருகிறது. அதன் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் ஒருவாரம் ஐகானிக் வார விழா கொண்டாடப்படுகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களைக் கொண்ட கோவைக் கோட்டத்தில் வசிக்கும் 58.44,296 ரேசன் கார்டுதாரர்களுக்கும், மற்றும் 1,76,85,327 பயனாளிகளுக்கும் தேவையான அரிசி, கோதுமை ஆகிய உணவுப்பொருட்கள் மத்திய அரசின் எப்சிஐ சார்பில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பாரத பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்பது உணவு பாதுகாப்பு நலத்திட்டமாகும். இது இந்தியாவில் கோவிட் தொற்று நோய் காலங்களின் போது கடந்த மார்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-20ம் ஆண்டில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும், ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கும் பொது விநியோக முறை அமல்படுத்தப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் கோவை மண்டலத்தில் உள்ள 9 மாவடங்களில் மட்டும், 6,02,600 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 37,688 மெட்ரிக் டன் கூடுதலாக, கோதுமையை இலவசமாக வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் இதுவரை, இத்திட்டத்தின்கீழ் 8,69,937 டன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மற்றும் கருர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு, நாமக்கல் ஜெயா வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் மூலமாக, நாமக்கல் மாவட்ட பயனாளிகளுக்கு 87.435 டன் அரிசியும், 2,207 டன் கோதுமையும் இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வலுவூட்டப்பட்டஅரிசி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இந்த நவம்பர் மாதத்தில் 9 மாவட்டங்களுக்கு 1,663 டன் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், துணைத்தலைவர் சுப்புரத்தினம், பொருளாளர் சீரங்கன், நகர பாஜ தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் ஜெயா வேர் ஹவுசிங் ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியன் நன்றி கூறினார்.

Updated On: 30 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?