எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர் கறவை மாடுகள் வாங்க ரூ.45 ஆயிரம் மானியம்

Cow Loan Scheme -எஸ்சி, எஸ்டி பிரிவினர் கறவை மாடு வாங்குவதற்காக தாட்கோ மூலம் ரூ.45 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர் கறவை மாடுகள் வாங்க ரூ.45 ஆயிரம் மானியம்
X

பைல் படம்

Cow Loan Scheme -ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கறவை மாடு வாங்குவதற்காக தாட்கோ மூலம் ரூ.45 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 500-ல் 450 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 50 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் மான்யம் 2.25 கோடி வங்கிகடன் ரூ.4.87 கோடி கறவை மாடு வாங்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.45,000 வீதம் ரூ. 4.95 லட்சமும், பழங்குடியினர் 3 பேருக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.1.35 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிபந்தனைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது.

இத்திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத்தொகை ரூ.1,50,000-ல் 30 சதவீத மானியம் அதாவது ரூ.45,000 மானியமாக விடுவிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் அப்ளிகேஷன்.தாட்கோ.காம், பழங்குடியினர் ஃபாஸ்ட்.தாட்கோ.காம் என்ற வெப்சைட்டிலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T16:00:34+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...