/* */

தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் படிக்கலாம்: மத்திய இணை அமைச்சர்

Union Education Minister -தமிழ் மொழியில் மருத்துவம், மற்றும் இன்ஜினியரிங் படிக்கலாம் என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்பூர்ணாதேவி தெரிவித்தார்

HIGHLIGHTS

தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல்   படிக்கலாம்: மத்திய இணை அமைச்சர்
X

நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு அளித்த பாஜகவினர்

Union Education Minister -மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்பூர்ணா தேவி, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்துளார். அவருக்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பால்மடை பகுதியில், மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே. பி. ரராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் மகேஷ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

திருச்செங்கோட்டில் மாவட்ட பா.ஜ.க. நகர, மண்டல ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் அன்பூர்ணா தேவி கலந்து கொண்டு, மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சர்வேதச அளவில் இந்திய பொருளாதாரத்தையும், கல்வித்தரத்தையும் உயர்த்த பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும், அவரது சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மொழியிலேயே மருத்துவம், பொறியியல் படிப்புகளை மாணவர்கள் படிக்க முடியும். இதுவே அனைவருக்குமான வளர்ச்சியாகும்.

மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அனைத்து மாநில மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காக கொண்டே பிரதமர் அயராது உழைத்து வருகிறார் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ராஜேஸ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இன்று 10ம் தேதி மாலை 3 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் உள்ள, ஞானமணி இன்ஜினியரிங் கல்லூரியில் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெறுகிறது. சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் முன்னிலை வகிக்கிறார். மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்பூர்ணா தேவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். கல்லூரி சேர்மன் அரங்கண்ணன், தலைவர் மாலாலீனா, வைஸ் சேர்மன் மதுவந்தினி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

இன்று மாலை 5.30 மணிக்கு நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அமைச்சர் அன்பூர்ணா தேவி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 Oct 2022 4:54 AM GMT

Related News