மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: நாமக்கல், கோவை மாவட்ட அணிகள் வெற்றி

மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி, மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: நாமக்கல், கோவை மாவட்ட அணிகள் வெற்றி
X

மோகனூரில் நடைபெற்ற ஐவர் கால்பந்துபோட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், கோவை, நாமக்கல் மாவட்ட அணிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

மெஜஸ்டிக் கால்பந்து அகாடமி சார்பில், மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, 3-ஆம் ஆண்டு, ஐவர் கால்பந்து போட்டி, மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில், நாமக்கல், சேலம், தேனி, நாகர்கோவில், கோவை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 18 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், கோவை மாவட்டம், சூலூர் அணி முதல் பரிசும், மோகனூர் மெஜஸ்டிக் அணி 2-ம் பரிசும், ஈரோடு கால்பந்து அணி 3-ம் பரிசும், கரூர் பீனிக்ஸ் அணி 4-ம் நான்காம் பரிசும் வென்றன.

பெண்கள் பிரிவு போட்டியில், மோகனூர் ஆர்.ஆர்.சிக்ஸ் அணி முதல் பரிசும், நாமக்கல் அணி 2-ம் பரிசும், ஈரோடு அணி 3-ம் பரிசும், கோவை அணி 4-ம் பரிசும் பெற்றன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். ஆர்.ஆர்.சில்க்ஸ் உரிமையாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு தொகையுடன் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. போட்டியில், சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Updated On: 30 May 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா