/* */

நாமக்கல்லில் ஜூலை 3-ம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு

MK Stalin Latest News in Tamil -நாமக்கல்லில் ஜூலை 3-ம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஜூலை 3-ம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு
X

முதல்வர் மு.க. ஸ்டாலின்.

MK Stalin Latest News in Tamil - நாமக்கல்லில் வருகிற ஜூலை 3ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு வருகிற ஜூலை 3ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை நாமக்கல்,பொம்மைக்குட்டைமேடு அருகில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசுகிறார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு முன்னிலை வகிக்கிறார். இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

தி.மு.க.வின் சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத் தலைவர்கள் , நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று, அத்துடன், இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்காக பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி, பொம்மைக்குட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, நாமக்கல் முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Jun 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?