/* */

நாமக்கல்லில் ஸ்ரீ நரசிம்மசாமி தேர்த்திருவிழா: வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

நாமக்கல்லில் புகழ்பெற்ற ஸ்ரீ நரசிம்மசாமி பங்குனி தேர்த்திருவிழா வருகிற 29ம் தேதி துவங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஸ்ரீ நரசிம்மசாமி தேர்த்திருவிழா: வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
X

நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் கோயில் (கோப்பு படம்)

நாமக்கல்லில் புகழ்பெற்ற ஸ்ரீ நரசிம்மசாமி பங்குனி தேர்த்திருவிழா வருகிற 29ம் தேதி துவங்குகிறது. ஏப். 6ம் தேதி முப்பெரும் தேரோட்டம் நடைபெறுகிறது.

ஸ்ரீ ஆஞ்சநேயரால் கொண்டுவரப்பட்ட சாலகிராமம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம். இந்த மலையின் மேற்குப்பகுதியில் ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை ஸ்ரீ நரசிம்மர் கோயில் மலையைக் குடைந்து குடவறைக்கோயிலாக உள்ளது. மலையின் கிழக்குப்பகுதியில் அரங்கநாயகித் தாயாரோடு கூடிய ஸ்ரீ அரங்கநாதர் கோயில் குடவறைக்கோயிலாக உள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனம் கொண்ட நிலையில் அரங்காநாதர் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

ஒரே கல்லினால் உருவான மலையியின் இரண்டு புறமும் குடவறைக்கோயில்களைக்கொண்டு, சிறப்பு பெற்றத்தலமாக நாமக்கல் விளங்கி வருகிறது. கோட்டை பகுதியில், மலைக்கு மேற்குப்புறத்தில் 18 உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் நாமக்கல் மலையையும், ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். புராண சிறப்பு பெற்ற இக்கோயில்கள் கி.பி 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில்கள் அனைத்து மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டி உள்ளது. மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று கோயில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற 29ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு, ஸ்ரீ நரசிம்மர் கோயிலில் திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நாட்களில் தினசரி காலை 8 மணிக்கு அருள்மிகு நரசிம்மசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ அரங் கநாதரும் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். பகல் 11 மணிக்கு மெயின்ரோட்டில் குளக்கரை நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மீண்டும் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

ஏழாம் நாள் திருவிழாவாக, வருகிற ஏப்ரல் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பாகும். 8ம் நாள் திருவிழாவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபரி உற்சவம் நடைபெறும்.

9ம் நாள் திருவிழாவில் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும். காலை 9 மணிக்கு கோட்டையில் ஸ்ரீ நரசிம்மசுவாமி தேரோட்டம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மெயின் ரோட்டில் அருள்மிகு அரங்காநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டம் நடைபெறும். தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி சின்ராஜ், நாமக்கல் கலெக்டர்கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன், எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். 15ம் நாள் உற்சவமாக வருகிற ஏப். 12ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு ஆகியோர் செய்துள்ளனர்.

Updated On: 26 March 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  2. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  3. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  4. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  5. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  6. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  8. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  9. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!