நாமக்கல்லில் 11-ம் தேதி அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சிறப்பு சேர்க்கை முகாம்

நாமக்கல்லில் 11-ம் தேதி அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நாமக்கல்லில் 11-ம் தேதி அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சிறப்பு சேர்க்கை முகாம்
X

நாமக்கல்லில் வருகிற 11ம் தேதி அப்ரண்டிஸ் பயிற்சிக்கான சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் (நாப்ஸ்) மற்றும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி திட்டத்தின் (நாட்ஸ்) மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம், கீரம்பூர் அரசு ஐ.டி.ஐ நிறுவனத்தில் வருகிற 11ம் தேதி, காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ கோர்ஸ் படித்து தேர்ச்சி பெற்று, இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் மற்றும் டிப்ளமோ, இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

தகுதியானவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2, ஆதார் அட்டை, தேசிய / மாநில தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறலா ம். தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள, தொழிற்பழகுநர்களின் பணியிடங்களை நிறைவு செய்யும் வகையில் உரிய நிறுவன பேனர்களுடன் முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களை அறிய நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 04286 - 290297, 7904111101, 9443015914 ஆகிய தொலைபேசி எண்களில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா