/* */

ஆக.9 முதல் லாரி ஸ்டிரைக்? லாரி உரிமையாளர் கூட்டத்தில் அதிரடி முடிவு

ஆக.9க்குள் டீசல் விலையை குறைக்காவிட்டால், காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆக.9  முதல் லாரி ஸ்டிரைக்? லாரி உரிமையாளர் கூட்டத்தில் அதிரடி முடிவு
X

நாமக்கல்லில் நடைபெற்ற தென்மண்டல லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில், அதன் பொதுச்செயலாளர் சண்முகப்பா பேசினார். அருகில் தலைவர் கோபால் நாயுடு, தமிழ்நாடு பெடரேசன் தலைவர் குமாரசாமி ஆகியோர்.

தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (சிம்டா) நிர்வாகக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் கோபால்நாயுடு தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்ட முடிவில் சிம்டா பொதுச்செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில், கடந்த ஒரு ஆண்டில் டீசல் விலை ஒர லிட்டருக்க ரூ.28 உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கிலும் விடாமல் தொடர்ந்து டீசல் விலையை உயர்த்தி உள்ளனர். அதை உடனடியாக கட்டுப்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற்றால், டீசல் லிட்டருக்கு ரூ. 4 குறைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றி, இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக, ரூ.4 குறைத்தால், அனைத்து மாநிலங்களும் குறைப்பதற்கு, நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பகல் கொள்ளை நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 571 சுங்கச்சாவடிகளில், குறிப்பாக, தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில், ஏற்கனவே 33 சுங்கச்சாவடிகளுக்கு அதற்கான தொகை முழுவதும் வசூல் செய்து முடிந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து சுங்கம் வசூலித்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளைஅடித்துக் கொண்டிருக்கின்றனர்.

லாரிகளுக்கு குறிப்பிட்ட கம்பெனிகளின் ஸ்பீடு கவர்னர், 3எம் ஸ்டிக்கர்கள் பொருத்துவது போன்ற தவறை, கடந்த ஆட்சியாளர்கள் போல் செய்யாமல், அந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, லோடு ஏற்றுக்கூலி, இறக்கு கூலியை லாரி உரிமையாளர்களே கொடுத்து வருகின்றனர். வரும், ஆக. 1 முதல், சரக்கு அனுப்புபவர்களும், வாங்குபவர்ளுமே அதற்கு பொறுப்பு.

நாடு முழுவதும் சாலை விபத்தில் 1.62 லட்சம் பேர் இறந்தனர். தற்போது இது 60 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்நிலையிலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பிரிமியம் கட்டணத்தை உயர்த்தி பல கோடி ரூபாயைபகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன. இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வை வாபஸ் பெறவேண்டும்.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் ஆக. 9 வரை கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு சுமூகமான முடிவை, மத்திய, மாநில அரசுகள் எடுக்காவிட்டால், அவசர கூட்டத்தை கூட்டி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.

தமிழகம் முழுவதும், கொரோனா பரவல் காரணமாக, 30 சதவீதம் லாரிகள் மட்டுமே, அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படுகிறது. 6 மாதத்துக்கு ஒரு முறை, டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். டீசல் விலையை பொறுத்தவரை சர்வதேச டாலர் விலைக்கு 15 சதவீதம் உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் 260 சதவீதம் வரியை ஒரு லிட்டர் டீசல் மீது விதிக்கின்றனர்.

தென்மாநிலம் முழுவதும் 26 லட்சம் லாரிகள் உள்ளன. அவற்றில், தற்போது 7 லட்சம் லாரிகள் மட்டுமே இயங்குகிறது. குறைந்தது 40 சதவீதம் லாரிகள் ஓட்ட முடியாமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி) மீது எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. வாகனங்களுக்கு பயோ டீசல் என்ற பெயரில் போலி டீசல் பயன்படுத்துவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இது, கள்ளச்சந்தையில் சாராயம் விற்பனை செய்வது போல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு நினைத்தால், இந்த பயோடீசல் விற்பனையை 24 மணி நேரத்தில் தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் கூறினார்.

Updated On: 22 July 2021 1:23 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!