/* */

அரசு கல்லூரியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

ராசிபுரம் அரசு கல்லூரியில் தொழில்நுட்ப பூங்காஅமைப்பதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்

HIGHLIGHTS

அரசு கல்லூரியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதை எதிர்த்து கையெழுத்து இயக்கம்
X

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி மைதானத்தில், தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில், திரளான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவதாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர். இதைக்கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கடந்த வாரம், கல்லூரிக்குள் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை முன்பு மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திய, கல்லூரி முதல்வர் மாணவ மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் சொல்கிறோம் என்று கூறினார். அப்போது போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 9:30 மணி அளவில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அமைக்க இருக்கும் தொழில் நுட்ப பூங்காவினை மாற்று இடத்தில் அமைக்க கோரியும், கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரியும் சங்க நிர்வாகி யாழினிபிரியா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டத் தங்கராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு போராட்டத்தை தொடக்கி வைத்தனர். மாநில குழு உறுப்பினர் தீபிகா, கல்லூரி கிளை செயலாளர் ஹரிஷ், கிளை நிர்வாகிகள் முகமது நிஷார், குட்டியப்பன், தமிழ்மதி, சவுமியா, சுகவாணன் உள்ளிட்ட 1000 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பேனரில் கையெழுத்திட்டனர். பின்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் முயற்சியினை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On: 28 March 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?