/* */

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சட்டப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்படும், என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
X

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் தொல்லை தருவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், 18 வயது நிறைவடையாத ஆண், பெண் குழந்தைகளைப் பாலியல் நோக்கத்தோடு பின்தொடர்வது, கண்காணிப்பது, சைகைக் காட்டுவது, ஆபாச படம் காண்பிப்பது, படம் எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவ, பாலியல் உறவு கொள்வது உள்ளிட்டக் குற்றங்களுக்கு, சட்டப்படி 6 மாதம் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை இழந்து தங்களது வாழ்வின் முன்னேற்றப் பாதையை அடையாமல் மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்துவிடுவார்கள். இது சம்மந்தமாக தகவல் அளிக்க விரும்புவோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், 04286 - 233103 என்ற தொலைபேசி எண்ணிலும், சைல்டு லைன் 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டும் தகவல் அளிக்கலாம். தகவல் கொடுப்போரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?