சேந்தமங்கலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ரூ.52.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 186 பயனாளிகளுக்கு, ரூ. 52.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
HIGHLIGHTS

ஜமாபந்தி நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேந்தமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில், ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று 6வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், சேந்தமங்கலம் எம்.எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வருவாய்த் துறையின் சார்பில், தலா ரூ.82,000/- வீதம் 59 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் இண்டர்நெட் மூலம் பட்டாக்களும், 33 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான உத்திரவினையும்,20 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான உத்திரவினையும், 7 பயனாளிகளுக்கு நத்தம் உட்பிரிவு பட்டா உத்திரவினையும், 8 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்கள், 1 பயனாளிக்கு சாதி சான்றிதழ், 23 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகள், 1 ஆதரவற்ற விதவை உதவித்தொகை, 17 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் - மதிப்பில் இந்திரா காந்தி முதியோர் உதவித் தொகை உத்திரவு, தலா ரூ.18 ஆயிரம் மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.54 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.84 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித் தொகை, ரூ.22,500 மதிப்பில் 1 பயனாளிக்கு இயற்கை மரண உதவித் தொகை, தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.72 ஆயிரம் மதிப்பில் தற்காலிக உதவித் தொகை உத்திரவு உள்ளிட்டமொத்தம் 186 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 86 ஆயிரத்து 500 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அப்பன்ராஜ், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மணிமாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.