/* */

கேஸ் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பனை: தனியார் ஏஜென்சிக்கு ரூ.25,000 அபராதம்

சமையல் கேஸ் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் ரூ.25 ஆயிரம் அபராதம்.

HIGHLIGHTS

கேஸ் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பனை: தனியார் ஏஜென்சிக்கு ரூ.25,000 அபராதம்
X

பைல்படம்.

சமையல் கேஸ் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சார்ந்தவர் சசிகலா. இவர் கடந்த 2019 மே 6ம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746/- என பதிவு செய்துள்ளனர். மே 11ம் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800/- கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746/- என்று தான் உள்ளது, அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800/- கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.

கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர். விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், நுகர்வோருக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10,000/- இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5,000, வழக்கின் செலவுத் தொகை ரூ.5,000 மற்றும் நல நிதிக்கு ரூ.5,000 என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றாவிட்டால் நுகர்வோருக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி நுகர்வோருக்கு ஆதரவாக வாதிட்டார்.

Updated On: 30 Jun 2022 1:30 PM GMT

Related News