தனியார் ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு, சகோதரரர் மற்றும் தாய் மருத்துவமனையில்
நாமக்கல் தனியார் ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த நிலையில், அவரது சகோதரர் மற்றும் தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
HIGHLIGHTS

உயிரிழந்த மாணவி கலையரசி -
நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட, 10-ம் வப்பு மாணவி பரிதாமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் மற்றும் தாய் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் சந்தைப் பேட்டைப் புதூரை சேர்ந்தவர் சுஜாதா, இவருக்கு கலையரசி என்ற மகளும், பூபதி என்ற மகனும் உள்ளனர். கலையரசி நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மூவரும், நாமக்கல் பரமத்தி ரோட்டில், முன்னாள் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் ஷவர்மா பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று சாப்பிட்டுள்ளனர்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை மூவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மூவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.
இதன் பின்னர் இன்று திங்கள்கிழமை காலை, வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த கலையரசி எழுந்து வரவில்லை. அவரது தாய் சுஜாதா அவரை எழுப்பி பார்த்துள்ளார். அவர் எழுந்திருக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், மகள் கலையரசியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் சிறுமி கலையரசியின் உடல் பிரேத பரிசாதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாகணவி கலையரசியின் தாய் மற்றும் சகோதார் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை பிறந்த நாளாகும். இதனையொட்டி அவருடைய நண்பர்கள் 13 பேர் அன்று மாலை அந்த குறிப்பிட்ட தனியார் அசைவ உணவகத்தில் சவர்மா வாங்கி அங்கேயை சாப்பிட்டு பின்னர் விடுதிக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுதி பணியாளர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சென்று பார்வையிட்டு, நலம் விசாரித்தனர். மேலும் நாமக்கல் பரமத்தி ரோட்டில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் அதன் உரிமையாளர் நவீன்குமாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அங்கிருந்த உணவுப் பொருட்களை அழிக்கவும், ஹோட்டலுக்கு சீல் வைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அதே ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயரிந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.