/* */

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க மணல் லாரி கூட்டமைப்பு கோரிக்கை

மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மணல் லாரி கூட்டமைப்பினர், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க   மணல் லாரி கூட்டமைப்பு கோரிக்கை
X

நாமக்கல்லில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், மாநில கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் பேசினார்.

தமிழகத்தில் உடனடியாக அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி, நாமக்கல்லில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பு, மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கள் ஆகிய அமைப்புகளின் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மணலுக்காக காத்திருப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று நாமக்கல்லில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக அரசு மணல் வழங்கவில்லை. இதனால் கட்டுனமாப் பணிகள் அனைத்தும் பாதியில் நிற்கின்றது. மணல் கிடைக்காமல் சாதாரண பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மணலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. மணல் குவாரியை தொடங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மணல் கிடைக்கும். ஆறுகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், ஆட்கள் மூலம் மணல் எடுக்க நாங்கள் தயாரக உள்ளோம். விரைவில், மணல் குவாரிகளை திறக்க வேண்டுமென தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று அவர் கூறினார். திரளான மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 21 July 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!