நாமக்கல்லில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாதிரி தேர்வு

நாமக்கல்லில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாதிரி தேர்வு நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்லில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாதிரி தேர்வு
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல்லில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான, மாதிரித் தேர்வில், தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளாதவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜூலை 24ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. மூலம் பல்வேறு பணிகளுக்கான குரூப் 4 போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், முன்மாதிரி தேர்வுகள் நாமக்கல் மாவட்ட அளவில் ஜூலை 10 மற்றும் 17ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொல்லிமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் நடைபெறும். இத்தேர்வில் 100 பொதுத்தமிழ் வினாக்கள் மற்றும் 100 பொது அறிவியல் வினாக்கள் தமிழ், ஆங்கிலத்தில் இருக்கும். இம்மாதிரி தேர்வில், பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் மாதிரி தேர்வு நடைபெறும் 10ம் தேதி அன்று காலை 9 மணிக்குள் ஒரு ஆதார் அட்டை நகல், ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த, விண்ணப்பத்தின் நகல் கொண்டு வரவேண்டும். அதுபோல், 17ம் தேதி நடக்கும் தேர்வுக்கு குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் நகலையும் உடன் கொண்டு வரவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Jun 2022 1:00 PM GMT

Related News

Latest News

 1. மேட்டுப்பாளையம்
  காட்டு யானை தாக்கி வாட்சர் பலி
 2. கோவை மாநகர்
  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக...
 3. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 4. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 5. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 6. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 7. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 8. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 10. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்