தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை: இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை: இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
X

பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய இப்தார், முகம்மது அலி ஆகியோர்.

நாமக்கல் நகரில் தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஏமாற்றிய 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் இப்தார் (58), முகம்மது அலி (50). இவர்கள் இருவரும், ரூ.300 மதிப்புள்ள புடவை, பத்தி மற்றும் பூஜை சாமான்கள் அடங்கிய பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள், தீபாவளி பண்டிகைக்காக, தரமான பொருட்களை தள்ளுபடி விலையில் தருவதாகப் பொதுமக்களை ஏமாற்றி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்துள்ளனர். அந்த பொருட்களை வாங்கிய பொதுமக்கள் சிலர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அதை விற்பனை செய்தவர்களைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை நாமக்கல்–மோகனூர் ரோட்டில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டி ஏரி அருகில் அவர்கள் இருப்பதை அறிந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த நாமக்கல் போலீசார், அவர்களை மீட்டுக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
 4. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா