/* */

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரோடுகள் வெறிச்சோடின

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரோடுகள் வெறிச்: பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரோடுகள் வெறிச்சோடின
X

இன்று கொரோனா முழு ஊரடங்கால் நாமக்கல்மெயின் ரோடு பகுதி, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி, வெறிச்சோடிக் காணப்பட்டது.

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் ரோடுகள் வெறிச்சோடியது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நள்ளிவுரவு முதல் பஸ்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்று ஜவுளி கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உழவர் சந்தை, காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அனைத்து மெயின் ரோடுகளும், தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினார்கள். முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். விதிமுறைகளை மீறி சென்றோரிடம் அபரதாம் வசூலிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரிகள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிக்கை விநியோகம், ஓட்டல்கள் முதலிய அத்தியாவசியசேவைகள் இயங்கின. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது.

Updated On: 9 Jan 2022 2:45 AM GMT

Related News