/* */

முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த கோரிக்கை

Promotion Of Teachers -அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங் மற்றம் இடமாறுதல் கவுன்சலிங் உடனடியாக நடத்த ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த கோரிக்கை
X

பைல் படம்

Promotion Of Teachers -அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங் மற்றம் இடமாறுதல் கவுன்சலிங் உடனடியாக நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்த நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தமிழகத்தில் 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்முறையாக 100 சதவீதம் நேர்மையாக நடந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பலன் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடப்பு 2022 -2023 கல்வி ஆண்டு ஜூன் 13 அன்று பள்ளிகள் தொடங்கி 4 மாதங்கள் நிறைவு பெற்று உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களும் ஒவ்வொரு பாடத்திலும் பாதிக்கும் மேற்பட்ட பாடங்களை நடத்தி முடித்து காலாண்டு தேர்வும் நடத்தி முடித்து விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல், விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துதல் என தொடர் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஒரு சில வாரங்களில் பெரும்பாலான பாடங்களை முதுகலை ஆசிரியர்கள் நடத்தி முடிக்க வாய்ப்பு உள்ளதால், மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாலும், முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதாலும் மாணவர்கள் நலன் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் அப்பள்ளியில் உள்ள மூத்த முதுகலை ஆசிரியர் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பணிகளைச் செய்து கொண்டும், பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு அலுவலக பணிகளையும் சேர்த்து கவனிக்க முடியாமல் நாள் தோறும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் கடந்த வாரம் தமிழகத்தில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் கூடுதலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவே இருக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும் கலந்தாய்வை அரசு நடத்தியது போலவே, மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வையும், முதுகலை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வையும் அரசு விரைந்து நடத்திட வேண்டும்.

நடப்பு 2022-2023 கல்வி ஆண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட்டு, அந்த பள்ளிகளையும் மேல்நிலைப்பள்ளி தலைமை பதவி உயர்வு கலந்தாய்வில் உட்படுத்தி பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும். மேலும் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட முதுகலைப் ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முதுகலை ஆசிரியர்கள் பணிஅமர்த்தப் படுவதற்கு முன்பு முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலும், தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வையும் நடத்த வேண்டும். முதுகலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்த பலர் ஆண்டுக் கணக்கில் இன்னும் மலைப் பகுதிகளிலும், தம் சொந்த மாவட்டத்தை விட்டு தொலைதூர மாவட்டத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு 100 சதவீதம் நேர்மையான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி நல்ல வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Oct 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்