/* */

அக்னி நட்சத்திர காலத்திலும் கன மழை: 'ஊட்டி' ஆனது நாமக்கல்!

அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையிலும் கன மழை பெய்ததால், நாமக்கல் பகுதியில் குளுகுளு வானிலை நிலவுகிறது.

HIGHLIGHTS

அக்னி நட்சத்திர காலத்திலும் கன மழை:   ஊட்டி ஆனது நாமக்கல்!
X

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெய்யிலால். வெப்பநிலை 103 டிகிரிக்கும் அதிகமானது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். மதிய வேளையில் ரோடுகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. இரவு நேரத்திலும் வெப்பநிலை அதிகரித்ததால், வீட்டுக்குள் தூங்க முடியாமல் பொதுமக்கள்அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் துவங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நாமக்கல் நகரில் இரவு மணி முதல் 10.30 மணி வரை, பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வெப்பம் தனிந்து ஜில் கிளைமேட் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மழையளவு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விபரம் (மில்லிமீட்டரில்): நாமக்கல் 5. கலெக்டர் ஆபீஸ் 14, எருமப்பட்டி 5, குமாரபாளையம் 18.40, மங்களபுரம் 5.60, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 21, ராசிபுரம் 19.80, சேந்தமங்கலம் 6, திருச்செங்கோடு 12, கொல்லிமலை செம்மேடு 23. மாவட்டம் முழுவதும் ஒரே இரவில் மொத்தம் 133.80 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Updated On: 13 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்