பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள் உள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள்
X

பள்ளி, கல்லூரிகளுக்கு இலவமாக வழங்குவதற்காக, மரக்கன்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தேசிய பசுமைப்படை, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, கொல்லிமலை செங்கரை ஏகலைவா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஏராளமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்கு, 3 முதல், -4 அடி உயரம் உடைய, வேம்பு, பூவரசு மரக்கன்றுகள் உள்ளன. இந்த மரக்கன்றுகள், மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

நம்ம நாமக்கல், பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை, பூர்த்தி செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பெறப்படும் மரக்கன்றுகள் அனைத்தும், தங்களது பள்ளி வளாக எல்லைக்கள் நடப்பட்டு, தொடர்ந்து, 3 ஆண்டுகள் பராமரிக்க உறுதி அளிக்கப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். தேவைப்படுவோர், தேசியபசுமைப்படை, மவாட்ட ஒருங்கிணைப்பாளரை, 94435 65188 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Jun 2022 4:16 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 2. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 3. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 4. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 7. வழிகாட்டி
  மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 4300 பணியிடங்களுக்கான அறிவிப்பு
 8. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடி
 9. நாமக்கல்
  பெண் குரலில் பேசி ரூ.5 லட்சம் மோசடி: மர்ம நபர் மீது சைபர் கிரைம்...
 10. ஆன்மீகம்
  இந்த நான்கு ராசிக்காரர்களை சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்குமாம்