/* */

சிறந்த விவசாயிகளுக்கு பரிசு: செயல்திறனை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய அழைப்பு

மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம், மூன்று இனங்களில் சிறந்த முறையில் செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

சிறந்த விவசாயிகளுக்கு பரிசு: செயல்திறனை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய அழைப்பு
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம், மூன்று இனங்களில் சிறந்த முறையில் செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின், 75வது சுதந்திரதின அமுத பெருவிழா, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் துவங்கப்பட்டு, வரும், 2023 ஆக. 15 வரை கொண்டாடப்படுகிறது. இதன் மூலம், மத்திய அரசின் முதன்மைத்திட்டங்களான பிஎம் -கிஷான், பிஎம் -பயிர் காப்பீட்டுத் திட்டம், மண்வள அட்டை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் கடன் அட்டை போன்ற திட்டங்களில், விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் 'கிசான் பாகிதாரி பிராத்மிக்டர் ஹமாரி' என்ற நிகழ்ச்சியின் மூலம், கண்காட்சிகள், அங்கக விளை பொருட்களுக்கான சான்றுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம், 3 இனங்களில் சிறந்த முறையில் செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.விவசாயிகள் வருமானத்தை அதிகமாக்கியதற்கான வெற்றி கதைகள், உற்பத்தித் திறனை அதிகப்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களில் பயன் அடைந்த விபரம், ஆகிய 3 பிரிவுகளில் விவசாயிகள் தங்கள் செயல் திறனை, 3 நிமிட அளவில் வீடியோவாக எடுத்து இன்னொவோட்டிவ் இந்தியா.மைஜிஓவி.இன்/இன்வைட்டிங்-வீடியோஸ் என்ற வெப்சைட்டில் அப்லோட் செய்து செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டியில், ஒவ்வொரு இனத்தில் இருந்தும், 3 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே, முதல் பரிசு ரூ. 11 ஆயிரம், 2ம் பரிசு 5,000, 3ம் பரிசு 3,000 வீதம் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள, நாளை (ஜூலை, 8) கடைசி நாள். நாமக்கல் மாவட்ட விவசாயிகள், இப்போட்டியில் கலந்து கொண்டு பயன் பெற சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 7 July 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?