/* */

மத்திய அரசின் நிதி உதவியுடன் கோழி, கால்நடை, பால் நிறுவனங்கள் துவங்க விண்ணப்பிக்கலாம்

Livestock And Poultry -விவசாய உற்பத்தியாளர், தனியார் நிறுவனம், தொழில்முனைவோர், பிரிவு 8 நிறுவனங்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறலாம்

HIGHLIGHTS

மத்திய அரசின் நிதி உதவியுடன் கோழி, கால்நடை, பால் நிறுவனங்கள் துவங்க விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

Livestock And Poultry -நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கோழி, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளம் சம்மந்தமான தொழில்களை துவக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு ரூ.15,000/- கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் பால், இறைச்சி மற்றும் கோழி உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள் நிறுவும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழில்முனைவோர், பிரிவு 8 நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (எஸ்ஐடிபிஐ) வழங்கும் உதய மித்ரா போர்ட்டல் மூலம் உரிய திட்ட மதிப்பீட்டறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி மதிப்பீடு மற்றும் ஒப்புதலுக்கு பிறகு, வட்டி சலுகை அங்கீகரிக்கப்பதற்காக விண்ணப்பம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள், முழுமையான திட்ட மதிப்பீட்டறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90% வரை வங்கி கடன் பெறும் வசதி உள்ளது. இத்திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறுகுறு நடுத்தர நிறுவனங்களாக இருப்பின் 10 சதவீதம் முதல் 15 வரையும், இதர நிறுவனங்களுக்கு 25சதவீதம் வரை ஆகும்.

இத்திட்டத்தில் தகுதியின் அடிப்படையில் 3 சதவீதம் வங்கி வட்டி சலுகை வழங்கப்படும். இத்திட்டத்தில் கீழ் தகுதியான மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட உச்சவரம்பின் கீழ் வரக்கூடிய திட்ட வரைவுகளுக்கு மட்டுமே கடன் உத்திரவாதம் வழங்கப்படும். மேலும் கடன் பெறுபவர்க்கு கடன் வசதியில் 25 சதவீதம் வரை உத்திரவாத பாதுகாப்பு கிடைக்கும்.

இத்திட்டத்தில் பெறும் வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் (தாமதமாக செலுத்துவதற்கான 2 ஆண்டுகள் உட்பட) 8 ஆண்டுகள் ஆகும். பயன்பெற விரும்புவோர் கால்நடை பராமரிப்புத்துறையை அனுகுவதன் மூலம் தங்களது திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை எளிதாகவும், திட்ட வரைவினை வங்கிக்கு, கால்நடை பராமரிப்பு (ம) பால்வள துறை மற்றும் அமைச்சகத்திற்கு எளிதாக சமர்பிக்கலாம்.

பால் பதப்படுத்துதல்:புதிய பால் பதப்படுத்தும் தொழிற்கூடங்களை நிறுவுதல் மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை தரம், சுகாதாரமான பால் பதப்படுத்தும் வசதிகள், பேக்கேஜிங் வசதிகள் மற்றும் தொடர்பான இதர நடவடிக்கைகளுடன் மேம்படுத்துதல்.மதிப்பு கூட்ப்பட்ட பால் பொருட்களான , ஐஸ் கிரீம், சீஸ், டெட்ரா பேக்கேஜிங் வசதிகளுடம் கூடிய, அல்ட்ரா .யர் வெப்பநிலை பதப்படுத்துதல், சுவைமிக்க பால், பால் பவுடர், மோர் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு துவக்கலாம்.

இறைச்சிபதப்படுத்துதல்:புதிய இறைச்சி பதப்படுத்தும் தொழிற் கூடங்களை நிறுவுதல் மற்றும் கிராமப்புற, நகர்புறங்களில் தற்பொழுது உள்ள ஆடு, செம்மறிஆடு, பன்றி எருமை ஆகியவற்றின் இறைச்சி பதப்படுத்தும் வசதிகளை மேம்படுத்துதல். பெரிய அளவிலான ஒருங்கிணைந்த இறைச்சி பதப்படுத்தும் வசதிகளை துவக்குதல். மதிப்பு கூட்டப்பட்ட இறைச்சி பொருட்களான, சாசோஜ், நகட், ஹாம், சலாமி, பன்றி இறைச்சி அல்லது மற்ற இறைச்சி பொருட்களுக்கான புதிய தொழிற் கூடங்களை நிறுவுதல் அல்லது ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல், இந்த வசதிகள் இறைச்சி பதப்படுத்துதலின் ஒருங்கிணைந்த பகுதியாகவோ அல்லது முழுமையான இறைச்சி மதிப்புக்கூட்டல் பிரிவாகவோ இருக்கலாம்.

கால்நடை தீவன ஆலை : சிறிய, நடுத்தர மற்றும் பெரிய கால்நடைத் தீவன ஆலை நிறுவுதல், மொத்த கலப்பு ரேஷன் பிளாக் தயாரிப்பு ஆலை, பைபாஸ் புரத ஆலை, தாது உப்புக்கலவை ஆலை, சைலேஜ் தயாரிக்கும் ஆலை, தீவன தரத்தினை உறுதி செய்திட நடுத்தர முதல் பெரிய தீவன ஆலை அல்லது ஏற்கனவே உள்ள தீவன ஆலையுடன் கால்நடை தீவன பரிசோதனை ஆய்வகம் இணைக்கப்பட வேண்டும்.

இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர், நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினை அணுகி தேவையான விபரங்களை பெற்று, "https://dahd.nic.in/ahid" or "https://ahidf.udyamimitra.in: என்ற வெப்சைட்டில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தகவல் வெளியிட்டுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Oct 2022 9:34 AM GMT

Related News