நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். ரோடுகள் வெறிச்சோடியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல் விழா
X

இன்று கொரோனா முழு ஊரடங்கால் நாமக்கல் பஸ் நிலையம் மற்றும் நகரில் அனைத்து ரோடுகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. தைப்பொங்கல் விழாவில், கடந்த 2 நாட்களாக, பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இன்று காணும் பொங்கல் பண்டிகை. வழக்கமாக காணும் பொங்கல் பண்டிகையின் போது நாமக்கல் மாவட்டத்தில் கொமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், மோகனூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பலரும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் காவிரி கரையோரரங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அப்பகுதிகளில் ஆங்காங்கே கூட்டமாக கூடி சிற்றுண்டி அருந்தி, விளையாடி மகிழ்வார்கள்.

சிறு குழந்தைகள் இந்த நாளை மிகவும் குதூகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

முழு ஊரடங்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று நள்ளிவுரவு முதல் பஸ்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இன்று ஜவுளி கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உழவர் சந்தை, காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அனைத்து மெயின் ரோடுகளும், தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். விதிமுறைகளை மீறி சென்றோரிடம் அபரதாம் வசூலிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரிகள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிக்கை விநியோகம், ஓட்டல்கள் முதலிய அத்தியாவசியசேவைகள் அனுமதிக்கப்பட்டன. பண்டிகை விடுமுறையால் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது.

Updated On: 2022-01-16T10:16:17+05:30

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
 2. மதுரை மாநகர்
  பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
 3. மயிலாடுதுறை
  சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 4. பரமக்குடி
  பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன்...
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பள்ளி விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா பங்கேற்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:
 7. மேலூர்
  மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
 8. மேலூர்
  மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு