/* */

நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்

Awareness - நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

Awareness | Police Today
X

ராசிபுரத்தில் போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற, போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Awareness - போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி ராசிபுரம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் முன்னிலை வகித்தார். பேரணியில் போலீசார் மற்றும் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய ரோடுகள் வழியாகச் சென்று, ஆத்தூர் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, புகையிலை, பான் மசாலா உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த போஸ்டர்களை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமகிரிப்பேட்டை காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்டன் தலைமையில் நாமகிரிப்பேட்டையில் இருந்து சீராப்பள்ளி வரை போலீசார் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் சீராப்பள்ளி, ஆயில்பட்டி போலீஸ் நிலையங்கள் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமை வகித்தார். அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருச்செங்கோடு காவல்துறை சார்பில் குமாரமங்கலத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகனங்கள் அடங்கிய போஸ்டர்களை கையில் பிடித்தபடி சென்றனர். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு டிஎஸ்பி சீனிவாசன், ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், விவேகானந்தா கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Jun 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்