/* */

ஈர நிலம் புகைப்படப் போட்டி : பங்கேற்க வனத்துறை அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஈரநிலம் தொடர்பான புகைப்படப் போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

HIGHLIGHTS

ஈர நிலம் புகைப்படப் போட்டி : பங்கேற்க வனத்துறை அழைப்பு
X
கோப்பு படம் 

தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பிப்.2-ம் தேதி ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தான விழா, நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய உறுப்பினர் செயலரின் அறிவுரையின்படி நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, வரும் 24-ம் தேதி வரை இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் நடைபெறும். ஈரநிலம் தொடர்பான மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைவரும், ஈர நிலங்கள் தொடர்பான போட்டோக்களை, வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்குள், dyfnamakkal@yahoo.co.in- என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இப்போட்டியில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோர்களை, கலெக்டர் தலைமையிலான தணிக்கைக் குழு தேர்வு செய்ய உள்ளது என மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...