/* */

நாமக்கல்லில் இன்று 490 மையங்களில் 22ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 490 முகாம்களில், 22ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இன்று 490 மையங்களில் 22ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 490 முகாம்களில், 22ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (83.92 சதவீதம்) 12,28,801 பேருக்கும், (முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 2,35,499), இரண்டாம் தவணை தடுப்பூசி (59.51 சதவீதம்) 8,71,355 பேருக்கும், (இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 2,79,810) செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 21 மெகா தடுப்பூசி முகாம்களில் 7,29,018 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர்.

22ம் கட்டமாக இன்று 12ம் தேதி சனிக்கிழமை அனைத்து பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 456 நிலையான முகாம்கள் மூலமாகவும் 34 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், மொத்தம் 490 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு, கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 12 Feb 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்