/* */

நான்கு மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் , டீசல் விலை உயர்வு

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன.

HIGHLIGHTS

நான்கு மாதங்களுக்கு பிறகு பெட்ரோல்  , டீசல் விலை உயர்வு
X

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள், சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக, தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் கடும் கொரோனா தொற்று பரவல் காலத்திலும். அரசு விடுமுறை நாட்களிலும், அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்களும், வணிகர்களும், லாரி, பஸ், கார், ஆட்டோ உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்.6ம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக பெட்ரோல் டீசல் விலை மீதான மத்திய அரசின் வரி குறைறக்கப்பட்டதால், அதன் விலை குறைந்தது.

கடந்த ஏப்.6ம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ.111.48 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் விலை ரூ.115.79 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.101.59 ஆகவும் இருந்தது. விலை குறைவுக்குப்பின் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.27 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் ரூ.108.62 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94.88 ஆகவும் கடந்த 4 மாதங்களாக விலை மாறுதல் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9 பைசா உயர்த்தப்பட்டு ரூ.103.36 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.108.72 ஆகவும், டீசல் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.94.98 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 4 Aug 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?