/* */

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன்   ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி
X

நாமக்கல் மாவட்டத்தில்,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

ஐகோர்ட்டு அறிவுரைப்படி, ஐல்லிக்கட்டு ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களைத் தவிர வேறு போட்டிகள் நடத்தக் கூடாது. ஜல்லிகட்டு நடைபெறும் நாளன்று கால்நடை டாக்டர்களால் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். காளைகளுக்கு போதிய உணவு, குடிநீர் வழங்க வேண்டும். காளை அருகில் அதன் உரிமையாளர் இருக்க வேண்டும். போட்டி நடைபெறும் இடத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவேண்டும். போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும். பதிவு செய்யப்பட்ட வீரர்களை தனிமைப்படுத்திக் காட்டுவதற்காக அவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்க வேண்டும். இளைஞர்கள் காளையின் திமிலை மட்டுமே பிடித்து அடக்க வேண்டும். மேலும் 15 மீட்டர் தூரம் அல்லது 30 வினாடிகள் அல்லது காளை மூன்று துள்ளல் துள்ளும் வரை மட்டுமே காளையை அடக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் காளையின் வால் மற்றும் கொம்பை பிடிக்கக்கூடாது, விதிகளை மீறும் மாடுபிடி வீரர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க, வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு தேங்காய் நார்களை தரையில் பரப்ப வேண்டும். அதற்கு அப்பால் மட்டுமே பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட வேண்டும். வாடிவாசலில் இருந்து காளை அடக்கும் தூரமான 15 மீட்டரைக் கடந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தொடக்கூடாது. பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அரங்கத்தை அமைக்கவேண்டும். அதன் உறுதித்தன்மையினை பொதுப்பணித்துறை மூலம் உறுதிசெய்யப்படும்.

காளைகள் பார்வையாளர்களை தாக்காமல் இருக்கும் வகையில் வாடிவாசலில் இருந்து காளைகள் சென்று சேரும் கொட்டகை வரை, 8 அடி உயரத்தில் இரண்டு அடுக்கு தடுப்பு அமைக்கவேண்டும். தேவைப்படும்போது காளைகளை உடனடியாக வெளிக்கொண்டுவர அவசர வழியை கண்டிப்பாக ஏற்படுத்தவேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காயமடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்கவேண்டும். அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களும், அனைத்து துறை அரசு அலுவலர்களும், மாடு பிடி வீரர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஆர்டிஓக்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவசுப்ரமணியன், பிஆர்ஓ சீனிவாசன் மற்றும், ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?