/* */

2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள் கடும் அவதி

இரண்டு வாரங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததல் நாமக்கல் நகராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல்  நரிக்குறவர் காலனி மக்கள் கடும் அவதி
X

நாமக்கல் நகராட்சி 38வது வார்டு நரிக்குறவர் காலனி பொதுமக்கள், 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததல் நாமக்கல் நகராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு நரிக்குறவர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு காவிரி குடிநீர் மற்றும் போர்வெல் கிணறு மூலம் பிற பயன்பாட்டுக்கான தண்ணீரும் விநியோக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்திற்கு மேலாக காவிரிக் குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நரிக்குறவர் காலனியில் உள்ள மக்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த இரு வாரங்களாக காவிரிக் குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லை. விலை கொடுத்து வாங்க முடியாத காரணத்தால் சுமார் 2 கி.மீ., தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.

வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயத்தில் சிறுவர்கள் தண்ணீர் எடுத்துவர இரு சக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். நரிக்குறவர் காலனி வீதியில் அடிப்படை வசதியான சாக்கடை வசதியில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் சாலையிலேயே குளம்போல் தேங்கி நிற்கிறது.மேலும் இப்பகுதியில் மக்கள் வெளியூர் சென்று வருவதற்கு கூட பேருந்து வசதியும் இல்லை.

கழிவுநீர் சாக்கடை, பஸ் வசதியில்லாமல் இருந்தாலும் குடிநீர், தண்ணீர் விநியோகம் இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம். நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.

Updated On: 2 Oct 2022 3:18 AM GMT

Related News