/* */

நாமக்கல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 29ம் தேதி வரை விருப்ப மனு

நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்க 29ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 29ம் தேதி வரை விருப்ப மனு
X

ராஜேஷ்குமார், எம்.பி, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவேர், தங்களின் விருப்ப மனுக்களை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.5,000, டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ரூ. 2,500 வீதம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்ப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள், நாமக்கல்லில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிட விரும்புவோர் கட்டணத்தில் பாதித் தொகையை செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  4. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  5. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  6. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  7. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  8. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  9. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  10. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!