/* */

இந்தியாவில் சுயமாக சம்பாதிப்பது 24 சதவீத பெண்கள் மட்டுமே: வேளாண் இயக்குநர்

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், டிரினிடி ஃபெஸ்ட் - 2023 என்ற தலைப்பில் மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது.

HIGHLIGHTS

இந்தியாவில் சுயமாக சம்பாதிப்பது 24 சதவீத பெண்கள் மட்டுமே: வேளாண் இயக்குநர்
X

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், செய்தித்தாள்களின் முக்கியத்துவத்தை உனர்த்தும் வகையில் மாணவிகளின் நடனம் நடைபெற்றது.

இந்தியாவில் 24 சதவீத பெண்கள் மட்டுமே, சுயமாக சம்பாதிக்கின்றனர். மற்றவர்கள் அடுத்தவர்களை சார்ந்தே வாழ்கின்றனர் என்று கல்லூரி விழாவில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், டிரினிடி ஃபெஸ்ட் - 2023 என்ற தலைப்பில் மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் செங்கோடன் தலைமை வகித்தார். செயலாளர் தென்பாண்டியன் நல்லுசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கான, மணப்பெண் அலங்காரம், கோலம், சமையல், கழிவில் இருந்து கலைப்பொருள் உருவாக்கம், பூக்கள் அலங்கார வடிவமைப்பு, வண்ணம் பூசுதல், தனிநபர் நடனம், குழு நடனம் மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க (டிசிஎம்எஸ்) இணைப்பதிவாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் விஜயசக்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, 13 வயது முதல் 19 வயது வரை டீன் ஏஜ் எனப்படும் பருவமாகும்.

இக்காலங்களில் மாணவியர் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். படிக்கும் காலத்தில் டிவி மற்றும் செல்போன்களுக்கு அடிமையாகி வீனாக பொழுதை கழிக்கக் கூடாது. குறிப்பாக அதில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. குறிப்பாக சீரியல்கள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளøப் பார்த்து நேரத்தை வீனடிக்கக் கூடாது. வாழ்க்கையில் குறிக்கோள் இல்லையென்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது.

இந்திய மொத்த மகளிரில் 24 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் தேவைகளுக்கு, தாங்களே பணம் சம்பாதிக்கின்றனர். மற்றவர்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பிறரை சார்ந்தே வாழ்கிறார்கள். பிறர் குறைகளை விமர்சிப்பதை விட நம் குறைகளை நாமே கண்டறிந்து அதற்கான விடைகளை தேட வேண்டும். மகளிர் அனைவருக்கும் சமயோஜித புத்தி என்பது எப்போதும் அவசியமாகிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் லட்சுமிநாராயணன், உயர்கல்வி இயக்குனர் அரசுபரமேசுவரன், தமிழ்த்துறைத் தலைவர்கள் அனுராதா, சாவித்திரி, நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தங்கம் மருத்துவமனை டாக்டர்கள் மல்லிகா குழந்தைவேல், சுபா, ஆடிட்டர் ராகவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 18 March 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  2. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  3. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  5. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  6. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  7. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...
  8. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  10. வீடியோ
    1947 தேர்தலுக்கும் 2024 தேர்தலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? #annamalai...