மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு

கந்தம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி மேட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சின்னுசாமி (72). இவரது மனைவி கண்ணம்மாள். இவர்கள் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சின்னுசாமி அவரது மேட்டுக்காட்டில் உள்ள மேய்ச்சல் தரையில், ஆடுகளை மேய்த்துக்கொண்டு, மெயின் ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நபர் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

இந்த விபத்தில் கீழே விழுந்த சின்னுசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவரை தேடி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2023 10:00 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
 3. குமாரபாளையம்
  அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
 5. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
 7. தென்காசி
  தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
 8. சினிமா
  நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
 9. தென்காசி
  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
 10. ஆலங்குளம்
  மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை