/* */

நாமக்கல் மாவட்டத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் துவக்கி வைப்பு

முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்த புதிய பள்ளிக் கட்டிட கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் துவக்கி வைப்பு
X

பொட்டனம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நாமக்கல் மா வட்டத்தில் ரூ. 6.85 கோடி மதிப்பில் 22 புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலவர் ஸ்டாலின் கலந்துகொண்டு, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கும், மாணவர் வருகையை அதிகரிப்பதற்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கும், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ. 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் நடப்பாண்டில் கட்டப்படும் என்றும், பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 150 கோடி நிதியுடன் சேர்த்து தற்போது மேலும் ரூ. 115 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் கடந்த அக்டோபர் 10ம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2,72,857 மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில், 36 மாவட்டங்களில், 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 2,462 பள்ளிக் கட்டிடங்கள், 5,351 குழந்தை நேய அம்சங்களுடன் கூடிய புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் இருந்த தொடங்கி வைத்தார்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் கொண்டாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டிடம், உஞ்சனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், குட்டிக்காப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், சக்கராம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், கோக்கலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 வகுப்பறை பள்ளி கட்டடம், பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 வகுப்பறை பள்ளி கட்டடம், குண்டூர் நாடு ஊராட்சி தென்னூர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், கூடுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், சப்பையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை பள்ளி கட்டடம், ஹரிஜன் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், மொரங்கம் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், கொட்டப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், செட்டிச்சிப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், ராசாம்பாளையம் தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை பள்ளி கட்டடம், ஓலப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டிடம், பிள்ளாநல்லூர் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், கரிப்பனூர் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், பொட்டணம் தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை பள்ளி கட்டடம், உத்தரகடிகாவல் ஊராட்சி தாண்டகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், வாழவந்திக்கோம்பை ஊராட்சி பெரியபள்ளம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டடம், சித்தாளந்தூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை பள்ளி கட்டடம் என மொத்தம் 22 பள்ளிகளில் ரூ.6.85 கோடி மதிப்பில் புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொட்டனம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு வகுப்பறை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Feb 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?