/* */

தேசிய பெண் குழந்தைகள் தினம்: மாணவியருக்கு கலெக்டர் வாழ்த்து

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவியருக்கு நாமக்கல் கலெக்டர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேசிய பெண் குழந்தைகள் தினம்: மாணவியருக்கு கலெக்டர் வாழ்த்து
X

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வண்ணப்படம் அச்சிடப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் தடுத்தல் ஆகியவை தொடர்பாக இரு மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துமடல் வழங்கினார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஜனவரி 24ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பெண் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட உரிமைகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு போன்றவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயோ சிங் வாழ்த்துமடல் வழங்கினார். மேலும், அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குழந்தை திருமணம் தடுத்தலுக்கான வண்ணப்படம் அச்சிடப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகத்தையும் கலெக்டர் வெளியிட்டு பெண் குழந்தைகளுக்கு வழங்கிõனர்.

மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  2. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  3. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  4. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  5. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  6. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  7. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  10. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்