நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்: கலெக்டர் ஆய்வு
X

மோகனூர், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி சிறப்பு முகாமை , கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கனவே கடந்த 12, 19ம் தேதிகளில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 1,16,773 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 3 வது கட்டமாக இன்று, 476 நிலையான முகாம்கள் மூலமாகவும், 24 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் மொத்தம் 500 இடங்களில் கொரோனா நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில் 210 டாக்டர்கள், 430 நர்சுகள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 ஆசிரியர்கள், 415 பயிற்சி நர்சுகள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் ஆர்வமாக வந்து, அனைத்து முகாம்களிலும் காலை முதலே முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி போடும் பணிகளை கண்காணிக்க சப் கலெக்டர்கள், தாசில்தார்கள், டாக்டர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேவைக்கேற்ப முகாம்களுக்கு உடனுக்குடன் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மோகனூர் வட்டாரத்தில் அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் நடுநிலைப்பள்ளி, மோகனூர் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மருந்துகள் வழங்கும் பிரிவு, ஆபரேசன் தியேட்டர், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி, பிஆர்ஓ சீனிவாசன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி 45 பேருக்கு கொரோனா
 2. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் 23ம் தேதி 54 பேருக்கு கொரோனா
 3. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் 23ம் தேதி 2 பேருக்கு கொரோனா
 4. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 5. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 6. இராமநாதபுரம்
  ராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 7. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 8. சிவகங்கை
  சிவகங்கை மாவட்டத்தில் 23ம் தேதி 11 பேருக்கு கொரோனா
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 23ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி