/* */

நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில் ரூ.256 கோடி குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல்

நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில் ரூ.256 கோடி புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில் ரூ.256 கோடி குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல்
X

நாமக்கல் நகராட்சி அலுவலகம்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டத்தை ரூ.256.41 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்த நகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாமக்கல் நகர்மன்றக் கூட்டம், அதன் சேர்மன் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் சுதா, துணைத் தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், கடந்த 2017–ஆம் ஆண்டு நகராட்சியுடன் இணைக்கப்பட்ட, 9 பஞ்சாயத்துக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜேடர்பாளையத்தில் இருந்து புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக உலக வங்கி பங்களிப்புடன் ரூ.185.24 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் ரூ.256.41 கோடி திருத்திய மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் நகராட்சி 13, 21, 24–ஆவது வார்டுகளுக்கு உள்பட்ட பகுதியில் சமுதாயக் கழிப்பிடம் ரூ.86.20 லட்சத்தில் கட்டுவது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், 21 நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 18 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

Updated On: 19 May 2022 1:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு