நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில் உண்டியல் திறப்பு

Sri Veera Anjaneyar Temple -நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.45 லட்சம் பெறப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில் உண்டியல் திறப்பு
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

Sri Veera Anjaneyar Temple -நாமக்கல் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினசரி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயிலில் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும்.

கடந்த 23.6.022 அன்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று கோயில் செயல் அலுவலர் இளையராஜா மேற்பார்வையில், பக்தர்கள் முன்னிலையில் மீண்டும் உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ. 37லட்சத்து 17 ஆயிரத்து 665, தங்கம் 57 கிராம், வெள்ளி 22 கிராம் கிடைக்கப் பெற்றது.

இதேபோல் அருள்மிகு நாமகிரித்தாய் உடனுறை நரசிம்மசாமி திருக்கோயிலில் 4 உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 315, தங்கம் 58 கிராம், வெள்ளி 141 கிராம் கிடைக்கப் பெற்றது.

இரண்டு கோயில்களிலும் சேர்த்து உண்டியல்களில் இருந்து பக்தர்களின் காணிக்கையாக மொத்தம் ரொக்கம் ரூ.44 லட்சத்து 99 ஆயிரத்து 980, தங்கம் 115 கிராம், வெள்ளி 163 கிராம் கணக்கீடு செய்யப்பட்டது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T15:13:47+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...