/* */

நாமக்கல்லில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விதை பரிசோதனை தொழில்நுட்ப பயிற்சி...

நாமக்கல்லில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விதைப்பரிசோதனை தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விதை பரிசோதனை தொழில்நுட்ப பயிற்சி...
X

நாமக்கல் மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள முசிறி விவசாய தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண்மை தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குறுகியகால பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முசிறி விவசாய தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக, ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சி பிரிவின் கீழ். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது, விதை பரிசோதனை நிலையத்தில் பல்வேறு விதை மாதிரிகளைப் பெறுதல், பதிவு செய்தல், பதிவுறுத்தாள், பதிவேடு பராமரித்தல், விதை மாதிரிகளை உபகரணங்கள் மூலம் சரியாக பிரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், விதையின் ஈரப்பதம், பரிசோதனை, புறத்தூய்மை, பிற ரக கலப்பு, முளைப்புத்திறன் கணக்கீட்டில் இயல்பான நாற்று, இயல்பற்ற நாற்று, கடினவிதை மற்றும் உயிரற்ற விதை போன்ற பரிசோதனைகளைப் பற்றி விளக்கமாகவும் செயல்முறையாகவும் விதைப் பரிசோதனை அலுவலர் அருணா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் வேளாண்மை அலுவலர்கள் சரஸ்வதி மற்றும் சரண்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Jan 2023 4:30 AM GMT

Related News