/* */

நாமக்கல் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்

நாமக்கல் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 பேர் காயம்
X

நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியில், 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, விபத்தில் சிக்கின.

நாமக்கல், திருச்சி மெயின் ரோடு என்.புதுப்பட்டியில், நேற்றிரவு 10 மணியளவில் சரக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோவை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, அருகில் இருந்த பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி, செங்கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சரக்கு ஆட்டோ மீது மோதியது.

லாரி மோதிய வேகத்தில் சரக்கு ஆட்டோ முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அத்துடன், பின்னால் வந்து கொண்டிருந்த டிராக்டர் மற்றும் காய்கறி ஏற்றி வந்த 2 லாரிகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய லாரி மீது மோதின.

இந்த விபத்தில், லாரி ஒன்று பேக்கரிக்குள் புகுந்தது. மற்றொரு லாரி, கார் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும், மோகனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் மூலம் மீட்கப்பட்டன. இதனால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Updated On: 29 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  4. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  8. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  9. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'