/* */

'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நாமக்கல் அரசு கல்லுாரி முதல்வர் மீண்டும் பொறுப்பேற்பு

namakkal news-நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வராக இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பால் கிரேஸ், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாமக்கல் அரசு கல்லுாரி முதல்வர் மீண்டும் பொறுப்பேற்பு
X

namakkal newsநாமக்கல் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் பால்கிரேஸ்.

namakkal newsராமநாதபுரம், திண்டிவணம் அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றியவர் பால் கிரேஸ். சில ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் அரசுக் கல்லூரியில் பணியாற்றிய போது, அங்கிருந்த அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற உத்தரவிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் அங்கிருந்து மாறுதல் செய்யப்பட்டு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு முதல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வராக பணியாற்றும் பால் கிரேஸ், கல்லூரி சேர்க்கையின் போதும், மாணவிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தருவதிலும், அவர் மாணவிகளுடனும், மாவட்ட நிர்வாகத்துடனும் ஒத்துழைக்கவில்லை என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்தன.

இதையொட்டி, கடந்த அக்டோபர் 19ம் தேதி கல்லூரி முதல்வர் பால்கிரேஸை, முதல்வர் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து, உயர்கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான விசாரணை முடியும் வரை அவர் வெளி இடங்ளுக்கு செல்லாமல் நாமக்கல்லில் தங்கி இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்து.

'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சில நாட்களில், முதல்வர் பால் கிரேஸ், சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்து, தனது 'சஸ்பெண்ட்' உத்தரவுக்கு தடை உத்தரவு பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த உத்தரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்காக, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை அரசு கல்லூரிக்கு அவர் வந்தார். அப்போது, உயர்கல்வித் துறை உத்தரவு கடிதம் இல்லாமல், அவரை முதல்வராக பொறுப்பேற்க அனுமதிக்க முடியாது என முதல்வராக பொறுப்பு வகித்த வந்த பேராசிரியர் பாரதி தெரிவித்து விட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார் பால்கிரேஸை, கல்லூரியை விட்டு வெளியே அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து, பால் கிரேஸ் கோர்ட்டு தடை உத்தரவுடன், சென்னையில் உள்ள உயர்கல்வி இயக்குநரகத்தை அனுகி, மீண்டும் நாமக்கல் அரசு கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்பதற்கான அனுமதி உத்தரவு கடிதத்தை பெற்றார். இதன் பின்னர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரிக்கு வந்த பால் கிரேஸ், முதல்வர் அறைக்கு சென்று மீண்டும் அந்த கல்லுாரியின் முதல்வராக பொறுப்பேற்று, அவரது வழக்கமான பணிகளை தொடர்ந்தார்.

Updated On: 26 Nov 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்