/* */

டன் ஒன்றுக்கு ரூ. 500 சிறப்பு ஊக்கத்தொகை; கரும்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க கோரிக்கை

namakkal news, namakkal news today- மத்திய அறிவித்துள்ள கூடுதல் விலையில் இருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு, 195 ரூபாய் வழங்கியது. அதை வரும் அரவை பருவத்துக்கு, ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

டன் ஒன்றுக்கு ரூ. 500 சிறப்பு ஊக்கத்தொகை; கரும்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க கோரிக்கை
X

namakkal news, namakkal news today- மத்திய அறிவித்துள்ள கூடுதல் விலையில் இருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு,  ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் நவலடி, கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலையின் மேலாண் இயக்குனர் மல்லிகா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது,

முடிந்த அரவை பருவத்தில், 1.94 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. அதன் மூலம், 8.72 சதவீதம் சராசரி சர்க்கரை கட்டுமானம் பெறப்பட்டது. 2022 டிச. 31 வரை, கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் அனைவருக்கும், நிலுவையின்றி கரும்புக்கான கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, ஜன., பிப்., மாதத்தில் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு ரூ. 2,000 வீதம் ன்பணம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள, ரூ. 821.25, இம்மாதம் இறுதிக்குள் வழங்கப்படும். வரும், 2023–24ம் அரவை பருத்தில், 2.20 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, இதுவரை, 3,500 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,000 ஏக்கர் கரும்பு பதிவாகம் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறினார்.

தொடர்ந்து, மத்திய அறிவித்துள்ள கரும்புக்கான கூடுதல் விலையில் இருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகை, டன் ஒன்றுக்கு ரூ. 195 வழங்கியது. அதை வரும் அரவை பருவத்துக்கு ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நடவு மானியம், நான்கு அடி பாருக்கு, இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு, ஏக்கருக்கு ரூ. 8,500 வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி அமைத்து, சாதாரண நடவுக்கும், ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும்.

வரும் அரவை பருவத்தில், வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்வதற்கு, விவசாயிகள், ஆலை நிர்வாகம், இயந்திர உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கரும்பு விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டது.

மேலும், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், இணை மின் உற்பத்தி திட்ட பணிகளை மீண்டும் துவக்கியுள்ள, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஆலையின் துணை தலைவர்கள் சந்திரசேகர், செங்குட்டுவன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜ், விவசாய சங்க பிரதிநிதிகள் வரதராஜன், குப்புராஜ், மணிவண்ணன், எட்டிக்கன் உள்ளிட்ட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 March 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!