‘சார்ஜிங்’ செய்தபோது தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்; நாமக்கல்லில் பரபரப்பு
namakkal news, namakkal news today-நாமக்கல் அருகே, சார்ஜிங் செய்தபோது, திடீரென தீப்பிடித்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள, எலக்ட்ரிக் எரிந்து சேதமானது.
HIGHLIGHTS

namakkal news, namakkal news today-‘சார்ஜிங்’ செய்தபோது தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்கால், நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது (கோப்பு படம்)
namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த முருங்கை பஞ்சாயத்து, பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயியான இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் கம்பெனியின் எலக்ட்ரிக் பைக் ஒன்றை ரூ. 2 லட்சம் விலை கொடுத்து வாங்கினார். கடந்த ஒரு ஆண்டாக அந்த பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு எலக்ட்ரீக் பைக் நிறுவனத்தார் பைக்குக்கு புதிய ரக பேட்டரி ஒன்றை பொருத்திக் கொடுத்துள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல் தங்கவேல் தனது பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், தனது எலக்ட்ரிக் பைக்குக்கு சார்ஜிங் செய்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு திடீரென சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த பைக் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அவரது வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அருகில், இருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து விட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் எலக்ட்ரிக் பைக் முற்றிலும் எரிந்து சேதமானது. கடந்த ஓர் ஆண்டாக எந்தப் பிரச்னையும் இல்லாத நிலையில் 4 நாட்களுக்கு முன்பு புதிய ரக பேட்டரி மாற்றிய நிலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டதுள்ளதாக தங்கவேல் தெரிவிக்கிறார். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை அருகில் இருந்த பொருட்கள் உட்பட ரூ. 2 லட்சம் மதிப்புள்ளான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.