நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து

namakkal news, namakkal news today- நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
X

namakkal news, namakkal news today- நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீயை, தீயைணப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

namakkal news, namakkal news today- நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பஞ்சாயத்து, கூச்சிக்கல் புதூரை சேர்ந்த வரதராஜ் என்பவரது மகன் கவுதம். இவர் சேந்தமங்கலம் ரோடு, செல்லப்பா காலனி பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் சிறிய தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இங்கு சாம்பிராணி தயாரித்து வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு பணி முடிவடைந்து, தொழிற்கூடத்தை அவர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடாட்டார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையானதால், தொழிற் கூடத்தை திறக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் அவரது தொழிற் கூடத்தில் தீப்பிடித்து புகை கிளம்பியுள்ளது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் இது குறித்து, நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்கூடத்தில் இருந்து இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழிற்கூட்டத்தில் ஏற்பட்ட, மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 March 2023 6:02 AM GMT

Related News

Latest News

 1. கோயம்புத்தூர்
  சிங்காநல்லூரில் போக்குவரத்து மாற்றம்: சோதனை ஓட்டம்
 2. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
 4. உடுமலைப்பேட்டை
  உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
 6. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
 7. நாமக்கல்
  சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
 8. தமிழ்நாடு
  காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
 9. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை