/* */

நாமக்கல்: மானியத்துடன் உணவு பதப்படுத்தும் நிறுவனம் துவங்க விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலை மானிய உதவியுடன் விரிவுபடுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு.

HIGHLIGHTS

நாமக்கல்: மானியத்துடன் உணவு பதப்படுத்தும் நிறுவனம் துவங்க விண்ணப்பிக்க அழைப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை சம்மந்தப்பட்ட உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மானியத்துடன் நிதி உதவி பெற்று தங்கள் தொழிலை விரிவாக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பாரத பிரதமரால் 2020-2021ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-2021-ஆம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய உணவுப் பதப்படுத்தும் அமைச்சக, தொழில்துறை வழியாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு கோழித்தீவனம் மற்றும் முட்டை சார்ந்த பொருட்கள் (பவுல்ட்ரி ஃபீட் அண்ட் புராடக்ட்ஸ்) பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழித்தீவனம் தவிர பிற உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்திற்கு 2021-2022-ஆம் ஆண்டிற்கு தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே முட்டை சார்ந்த பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் புதிய நிறுவனங்கள் தொடங்குதலுக்கு 106 நிறுவனங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தை அனுகி விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான ஆலோசனைக்கு ரிசோர்ஸ் பர்சன் வித்யபாரதி என்பவரை போன் நெ. 8870757380 மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Updated On: 27 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்