/* */

நாமக்கல் அரசு பள்ளிகள் செஸ் போட்டியில் 2,409 மாணவ மாணவிகள் பங்கேற்பு

நாமக்கல் அரசு பள்ளிகளில் நடந்த செஸ் போட்டியில் 2,409 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல்  அரசு பள்ளிகள் செஸ்  போட்டியில் 2,409 மாணவ மாணவிகள் பங்கேற்பு
X

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடந்தது.

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதன் முறையாக தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆக. 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக பார்ப்பதற்காகவும், சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடவும், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட அளவில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செஸ் போட்டியை நடத்தி மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்காக 4 பிரிவுகளில், 2 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 216 மாணவர்கள் மற்றும் 205 மாணவிகளும், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் 447 மாணவர்கள், 373 மாணவிகளும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 318 மாணவர்கள்மற்றும் 270 மாணவிகளும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 368 மாணவர்கள் மற்றும் 212 மாணவிகளும் என மொத்தம் 1,349 மாணவர்கள், 1,060 மாணவிகள் என மொத்தம் 2,409 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள். ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டியில் முதல் 3 இடங்களை பெறக்கூடிய மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மாவட்டத்தில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்தில் நடக்கக்கூடிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க மற்றும் சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாட அழைத்து செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 July 2022 3:46 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை