நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது
X

மத்திய அரசை கண்டித்து,  நாமக்கல்லில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்ட விவசாயிகளை, எம்எல்ஏ ராமலிங்கம் சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாககவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாமக்கல்லில் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்து கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட விவசாய சங்கத்தினரை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நேரில் சந்தித்து பொண்ணாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், கிழக்கு மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் மனோகரன், தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Sep 2021 10:30 AM GMT

Related News