/* */

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று 15ம் தேதி மாலைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

HIGHLIGHTS

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல்:  வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
X

ராஜேஷ்குமார். எம்.பி.,

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், ராஜேஷ்குமார் எம்.பி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக தலைமை அறிவித்துள்ளபடி, 15-வது பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், புதுச்சத்திரம் வடக்கு, புதுச்சத்திரம் தெற்கு, மோகனூர், எருமப்பட்டி, ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய 10 ஒன்றியங்களுக்கான திமுக நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும், அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், 3 துணைச் செயலாளர்கள், 3 மாவட்டப் பிரதிநிதிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனுக்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை, உரிய கட்டணம் செலுத்தி, இன்று 15ம் தேதி மாலை 5 மணிக்குள், கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தலைமைக்கழக பிரதிநிதி ஈரோடு இறைவனிடம் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Updated On: 14 Jun 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?